தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செல்வமணி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்கவேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12ஆம் தேதி சென்னையில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களை அழைத்து மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
கல்வித் தகுதிக்கு ஏற்ப பணியிடம் மற்றும் ஊதியம் வழங்கிட வேண்டும், மேலும் ஐஏஎஸ் தலைமையில் ஊதிய மாற்றக்குழு அமைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இடைத்தராசும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையமும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ரேஷன் கடைகளில் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் என திமுக அறிவித்துவிட்டு தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை, அதற்கான கமிட்டி அமைத்து ஜனவரி மாதத்திற்குள் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழகம் பொருள் வழங்கப்படுவதும், கூட்டுறவுதுறை சார்பில் கடை நடத்துவதும், பொருள் ஒதுக்கீடு செய்வது தமிழ்நாடு வழங்கல் துறை என மூன்று துறைகளின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடை துறையை தனித்துறையாக அறிவித்து மானியம் மற்றும் விளிம்பு தொகையினை கருவூலம் மூலம் வழங்கிடவேண்டும், மேலும் தாயுமானவர் திட்டத்தில் எடையாளர் மற்றும் லோடுமேன்கள் நியமிக்கப்படவில்லை என்றும், லாரி வாடகையை விற்பனையாளரை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளிவிட்டது என்றும் எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
வயதானவர்களுக்கு கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் சிரமம் உள்ளதால் ஓடிபி முறையை அமல்படுத்தி பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையில் நடைபெறும் போராட்ட தினத்தின் போது முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அதே நேரம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில செயற்குழுகூடி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன்
மாநில அணி நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல் விஜயகுமார் வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாமன்ற உறுப்பினர் கீதா வட்டக் கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரை மாநகர தலைவர் குமார் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments