திருச்சிராப்பள்ளி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 103.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் பேட்டியளித்த போது….
3.3 ஏக்கர் பரப்பளவில் 474 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது, 8 சதவீத வீட்டு வாடகைப்படியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் மற்றும் தற்போது குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். கார் பார்க்கிங் வசதியுடன் மாதம் ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்காக அவர்களிடம் வசூலிக்கப்படும். தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெறும் என்றும், அதன் பின்னர் காஜாமலை காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 4800 பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர், திருச்சியை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களின் விபரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அவர்களை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெற்றோரிடம் அவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.
அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிக்கு மார்ச் இறுதிக்குள் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும், அதற்கான கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்றது என்றார்.மத்திய பேருந்து நிலைய மேம்பாலம் அடுத்த மாதம் நீண்ட காலமாக பாதியில் நிற்கும் பணிகள் தொடங்கப்படும்.

அரை சுற்றுவட்ட சாலையை பொறுத்த அளவு துவாக்குடியிலிருந்து மாத்தூர் வரை உள்ள சாலை பணிகள் முடிவுற்று போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது. மாத்தூரிலிருந்து பஞ்சப்பூர் வரயுள்ள சாலையில் ஒரே ஒரு ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்தவுடன் போக்குவரத்துக்கு விடப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 28 February, 2022
 28 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments