Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

15 வருட நட்பு – சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவர்கள்!!

Advertisement

சமீபத்தில் நடந்த சர்வதேச அளவிலான 7வது இந்தோ – நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டியில் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் நம்ம ஊரு மாணவர்கள்.

நேபாளத்தின் போகாராவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 7 வது இந்தோ-நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு (2020-21) போட்டியில் சீனியர் இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் கல்லூரி மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் குமார். இவர்கள் திருச்சி தேசிய கல்லூரி பி.எஸ்.சி உடற்கல்வி முதல் ஆண்டு மாணவராக ஜே.சந்தோஷ் படித்து வருகின்றார். இவருடைய நண்பர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.தர்ஷன் குமாருடன் இணைந்து நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த போட்டியில் இருவரும் நான்கு ஆட்டங்களில் விளையாடி நேபாளத்தைச் சேர்ந்த கடுமையான போட்டியாளர்களுக்கு எதிராகவும், சிறுவயது முதலே, சுமார் 15 வருடங்களாக நண்பர்களான இவர்கள் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு தேசிய கிராமப்புற இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு அணிக்கு எதிராக கடுமையாகப் போராடி இறுதிப் போட்டியை வென்றது உட்பட போட்டிகளில் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று வாகை சூடினர்.

Advertisement

இதுகுறித்து பேட்மிட்டன் வீரர் சந்தோஷிடம் பேசினோம்… “என்னுடைய அப்பா கபடி பயிற்சியாளராகவும், அம்மா யோகா ஆசிரியராகவும் இருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதலின் படி சிறு வயது முதலே விளையாட்டு மீது ஆர்வமாக இருந்து வந்தேன். தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். பள்ளியில் படிக்கும்போது ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.

Advertisement

தற்போது நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றதற்கு என்னுடைய பயிற்சியாளர் ராஜீவ்காந்தி மற்றும் என்னுடைய ஆசிரியர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் உற்சாகம் அளித்து உதவி புரிந்தனர்‌. என்னுடைய நண்பன் தர்ஷன் குமாரும் நானும் சேர்ந்து விளையாடி தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில் ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே என்னுடைய இலக்காக உள்ளது” என்றார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *