பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் பறிமுதல்

பேக்கரியில்  155 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் பறிமுதல்

திருச்சி மாநகர பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பிரபல பேக்கரி விற்பனை செய்யும் உணவகத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கெட்டுப்போன சுமார் 27.450 கிலோ கேக் வகைகள் மற்றும் அதன் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்ய போது சுமார் 126.650 கேக் வகைகள் மற்றும் பப்ஸ் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சி ஆக மொத்தம் 155 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட அளிக்கப்பட்டன.

மேலும் அந்த இரண்டு இடத்திற்கும் அவசர தடையாணை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில்... உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றைய தினம் மீதமாகும் இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது என்றும் கெட்டுப்போன மற்றும் காலாவதியான கேக் போன்ற உணவுப் பொருட்களை உடனே அழித்து விட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆய்வின் போது அவ்வாறு குளிர்சாதனப்பெட்டியில் இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவுப் பொருட்களை கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், ஸ்டாலின், வசந்தன், இப்ராஹிம், செல்வராஜ், ஐன்ஸ்டின் மற்றும் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO