திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு வழக்குகள் 2.150 கிலோகிராம் கஞ்சா,புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 வழக்குகளில் 154.250 கிலோ கிராம் கஞ்சா,மற்றும் கரூர் மாவட்டத்தில் 135 வழக்குகளில் 42.312 கிலோகிராம் கஞ்சாவை உயர்நீதிமன்ற உத்தரவு படி தமிழ்நாட்டு
காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் சரக குழு தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை தலைவர் வி. வருண்குமார் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களான திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருச்சிராப்பள்ளி தடைய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் மற்றும் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திருச்சிராப்பள்ளி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் முன்னிலையில் மூன்று மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட 175 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 198.712 கிராம் கிலோ கிராம் கஞ்சா இன்று 20/4/2025-ஆம் தேதி 7 மணி முதல் 8:00 மணி வரை தஞ்சாவூர் மாவட்டம் செங்கம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அயோத்தி பட்டியில் உள்ள மெடிக்கல் என்விரோ சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நவீன இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments