அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது - லாரிகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொணலையில் அனுமதியின்றி 2 லாரிகளில் கிராவல் மண் கடத்திச் செல்லப்படுவதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .தகவல் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கொணலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் இரண்டு லாரிகளிலும் 12 யூனிட் கிராவல் மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் 12 யூனிட் கிராவல் மண்ணுடன் கடத்துச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் கிராவல் மண் கடத்திச் சென்றர்கள் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஏரிக்காரத் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் நெல்சன்ராஜ், கொணலை தெற்குத் தெருவை சேர்ந்த அருள்தாஸின் மகன் ஜான்சதீஷ் என தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் கிராவல் மண் கடத்தி வந்த இரண்டு லாரிகள் மற்றும் 12 யூனிட் கிராவல் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision