லித்தியம் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தில் 2 நாட்கள் வருமானவரித் துறையினர் சோதனை

லித்தியம் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தில் 2 நாட்கள் வருமானவரித் துறையினர் சோதனை

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த மைக்கேல், இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருச்சி அருகே கல்லணை செல்லும் சாலையில் ஜாஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெ ஓட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் லித்தியம் பேட்டரி தயாரிப்பு பணிகளும், சூரிய மின் தகடுகளை மின் உற்பத்திக்கு ஏற்ப வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கு தேவை யான சாதனங்களும் மற்றும் ரெயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 10 மாத காலமாக இந்த நிறுவனத்தில் சில பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு பணிபுரிபவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, திருச்சி வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காலை இந்த நிறுவனத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டு வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து 2-வது நாளாக மீண்டும் நேற்று காலை 10.30 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஒருபுறம் அதிகாரிகளது சோதனையும், மறுபுறம் வழக்கம் போல் தொழிலாளர்களின் சிறிய அளவிலான உற்பத்தி பணிகளும் நடந்தன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது திருச்சியில் வருமானவரித் துறை சோதனை நடைபெறும் ஐஸ்கான் எனர்ஜி நிறுவனத்தில், ராமலிங்கம் பங்கு தாரராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஈரோட்டில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்றதா? அல்லது வரி ஏய்ப்பு புகாரின் மீது சோதனை நடைபெறுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision