ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்

 இரயில் வண்டி எண் 07695 செகந்தராபாத் - இராமேஸ்வரம் செல்லும் விரைவு வண்டியில் வரை  இன்று மதியம்12.30 மணிக்கு வந்த எக்ஸ்பிரஸ் இரயில் வண்டி விழுப்புரம் இரயில் நிலைய நடைமேடை எண் 4 ல் வந்த போது காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு  உத்தரவுப்படியும் காவல்துறை இரயில்வே பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் V.வனிதா I இரயில்வே பாதுகாப்பு காவல்துறை துணை தலைவர் அபிஷேக் தீட்சித்  ஆகியோரின் அறிவுரைப்படியும் திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் க.அதிவீரபாண்டியன் அவர்கள் மற்றும் திருச்சி இருப்புபாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் R.பிரபாகரன் ஆகியோரின் மேற்பார்வையின் பேரில்

விழுப்புரம் இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலர்கள் வினோத்குமார் சிவராமன் விஜய் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கொண்ட தனிப்படையினரால் தடைச்செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் இரயிலில் கடத்தப்படுகிறதா என்று கண்டுப்பிடிக்க வேண்டி பொதுபொட்டியில் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான இருந்த நபர் பெங்களூர் மாவட்டம் 1கார்டன் கார்னர் காரகப்பா மிஷன்ரோடு சேர்ந்த முஹமதுஅத்ணான் என்பவரின் மகன் முகமது பருக் என்பவர் சந்தேகத்திற்கு இடமாக வைத்திருந்த பையில் சுமார் 2 கிலோ கஞ்சாவும் 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பசையும்(Ganja Paste) இருந்தது.

கைப்பற்ற பட்ட கஞ்சா பசையின் (Ganja Paste) சந்தை மதிப்பு சுமார் 1,60,000/- இருக்கும். 2கிலோ கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 40,000/- இருக்கும் மொத்த மதிப்பு 2,0000 லட்சம் இருக்கும். மேற்படி மேல்நடவடிக்கைகாக எதிரி மற்றும் சொத்தை போதை பொருள் நுண்ணறிவு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் C.பத்மஸ்ரீ இடம் ஒப்படைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO