2 கிலோ தங்கம் 7 லட்சம் ரூபாயோடு ஆள்கடத்தல், சேசிங் - 3 பேர் கைது
திருச்சியில் கடத்தல் தங்கம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் நகைகளுடன் கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டு கடத்தல் கும்பலை சேர்ந்தவரிடம் விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணியிடம் தங்கம் வாங்கவும் கடத்தி வரும் தங்கத்தை பெற்று செல்லவும் சில புரோக்கர்கள் உள்ளனர்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா (37) என்பவர் திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வெளிநாட்டு பயணிகளிடம் வாங்கினார்.அவற்றுடன் சாதிக் பாஷா தன் நண்பர்கள் நால்வருடன் காரில் சென்றார் அவர்களை தென்னூர் பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சாதிக் பாட்சாவையும் தங்கத்தையும் கடத்தியது.
அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். கடத்தல் கும்பலை சேர்ந்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் காரில் ஏறி தப்பிய போது தவறி விழுந்தார். பொதுமக்கள் அவரை பிடித்து தில்லைநகர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.விசாரித்ததில் கடத்தல் தங்கம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் தங்கத்தை பறிக்க வந்தது தெரிய வந்தது.
அதேசமயம் சமயபுரம் பகுதியில் சாதிக்பாஷாவை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்ட சாதிக்பாஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே கதிரேசன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சீனிவாசன் நகரைச் சேர்ந்த ஹக்கீம் ஜியாவுதீன் மற்றும் அப்துல் கபூர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தங்கம் கடத்தல் விவகாரத்தில் சாதிக் பாட்சா திருச்சி மாவட்டத்தில் இருந்து 2 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பெற்றுக் கொண்டு வந்ததாகவும், மேலும் அவர் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்தஎட்டு பேர் சேர்ந்த கும்பல் நகை மற்றும் பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn