உள்ளாடை மற்றும் செருப்பில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்.

உள்ளாடை மற்றும் செருப்பில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கிருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்க கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்ததில் அவர் உள்ளாடையில் மறைத்து வைத்து 1 கிலோ 421 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து. அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 99 லட்சத்து 18 ஆயிரம் ஆகும்.

இதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது, ஒரு பயணி யின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை தனியாக அழைத்து சோதனை செய்ததில் அவர் காலணியில் மறைத்து வைத்து 491 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சத்து 7 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 பயணிகளிடம் இருந்து 1 கிலோ 912 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision