திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த (26.05.23)-ந் தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலத்தின் கீழே ஒருவரை செல்போன் மற்றும் பணத்தை திருடியதற்காக கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் 1.வடிவேல் (22), த.பெ.சடையமுத்து, 2.சரத்குமார் (27), த.பெ.சாமிதுரை உட்பட ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிரிகள் வடிவேல் மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் கொலை குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments