திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு மீட்பு விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விழுப்புரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்ற பயணி தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு 9.60 லட்சம் ஆகும்.

அதே போன்று துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்தப் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஒரு பயணியின் உடமைகளில் பசை வடிவில் 250 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சம் ஆகும். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY







Comments