சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 210 ஏக்கர் வாழை சாய்ந்து சேதம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பூவன், ஏலரிசி மற்றும் நேந்திரம் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 219 ஏக்கர் வாழைத் தோட்டங்கள் சூறாவளி காற்றில் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தது.
சிறுகாம்பூர், பாண்டியபுரம் , மேலசீதேவிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் அடித்த சூறாவளி காற்றில் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரம், ஏலரிசி வாழைகள் வாழைத்தாருடன் உடைந்து கீழே சாய்ந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
தகவலறிந்த மண்ணச்சநல்லூர் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சூறாவளி காற்றில் சாய்ந்து சேதமடைந்த வாழை தோட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn