Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துவாக்குடியில் 224 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது.

துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக 03.03.2026 அன்று துவாக்குடி காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் படி துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் துவாக்குடி,

வாழவந்தான்கோட்டை மற்றும் அசூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அசூர், பூசாரி தெருவில் உள்ள சித்ரா மளிகை கடையில் சோதனை செய்த போது கடையின் உரிமையாளரான ஜெகதீஸ்வரன்(52), த.பெ.முத்துசாமி, என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்தபோது சுமார் 7.8 கிலோ மதிப்பிலான ஹான்ஸ் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் மேற்படி குட்காவை திருச்சி மாநகரம், வயலூர் ரோடு, அம்மையப்பா நகர் பகுதியை சேர்ந்த ஜமால் முகமது (62), த.பெ. அப்துல் முத்தலிப், என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியதன் பேரில், துவாக்குடி காவல் ஆய்வாளர் தலைமையில் 03.03.2026 இரவு 07.30 மணிக்கு ஜமால் முகமது என்பவரது வீட்டிற்கு சென்று சோதனை

நடத்தியதில் சட்ட விரோதமான விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 208.5 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டார்.
குற்ற எண். 89/26, U/s 123, 275 BNS r/w 6 r/w 24(1) COTPA Act 03.03.2026 அன்று பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபர்கள் ஜெகதீஸ்வரன்(52), த.பெ.முத்துசாமி, பூசாரி தெரு, அசூர், துவாக்குடி, திருச்சி மாவட்டம்,ஜமால் முகமது (62), த.பெ.அப்துல் முத்தலிப், அம்மையப்பா நகர், வயலூர் ரோடு, திருச்சி மாநகரம்.


மேற்கண்ட நபர்கள் இன்று (04.03.26) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்படி சட்டவிரோத விற்பனைக்காக வைக்கபட்டிருந்த குட்காவை கைப்பற்றிய துவாக்குடி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *