திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 28.03. 2025 அன்று முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் துறை இணைப்பேராசிரியர் ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரியின் முதல்வர் நான் ஆனந்தவல்லி தலைமை உரையாற்றினார். தமிழ் துறை தலைவர் செங்குட்டுவன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் கொண்டவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் தமிழடியான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அவர் தம் சிறப்பு முறையில் கல்லூரி காலம் மிகவும் மகிழ்வானது ஆகவே மகிழ்வுடன் வாழுங்கள் செல்பேசி பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பயனுள்ள செயல்களுக்காக நேரத்தை செலவிடுங்கள் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை நாம் மீட்டெடுத்து அவர்களுக்கான சுதந்திரமான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.
தமக்கென வாழாது பிறருக்காக வாழ்பவர் இருப்பதால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது இத்தகைய சிறந்த அரக்கருத்தை உலகிற்கு வழங்கிய தமிழ் மொழியை உயிரினும் மேலாக போற்ற வேண்டும்.
தமிழ் மொழி வழங்கிய அறக்கருத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தால் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நம் நாடும் முதன்மை இடம் பெறும் என்றார். தமிழ் துறையின் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments