திருச்சி ரேஷன் கடைகளில் 231 காலிப்பணியிடங்கள் - தேர்வு இல்லை உடனே விண்ணப்பியுங்கள்!

திருச்சி ரேஷன் கடைகளில் 231 காலிப்பணியிடங்கள் - தேர்வு இல்லை உடனே விண்ணப்பியுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 231 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தேர்வு இல்லாமல் நேரடியாக ஆட்ககள் நிரப்பட உள்ளனர்.


திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 231 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு எழுத்துத் தேர்வு இல்லாமல் ஆட்ககள் நிரப்பட உள்ளனர். இது குறித்து திருச்சி மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 231 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbtry.inஎன்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் www.drbtry.netவெளியிடப்பட்டுள்ளன.

அதன், விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனத்தில் கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பிப்பது தொடர்பாக.

https://youtu.be/aCFm0zOIgi0என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் jrtry.rcs@gmail.comஎன்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 0431 2420545 வாயிலாகவும் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி, தாமதிக்காமல் நவம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறுங்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO