பயணிகள் வருகை குறைவு காரணமாக 25 சிறப்பு ரயில்கள் ரத்து

பயணிகள் வருகை குறைவு காரணமாக 25 சிறப்பு ரயில்கள் ரத்து

கொரோனா தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ரயில்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ரயிலிலும் அனைத்து வகுப்புகளும் பல இருக்கைகள் காலியாக உள்ளன.


திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் ( வண்டி எண் - 02653 ) மலைக்கோட்டை ரயில்.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக தஞ்சை வரை செல்லும் ( வண்டி எண் - 06865 ) உழவன் எக்ஸ்பிரஸ் 

திருச்சி வழியாக சென்னை செல்லும் ஈரோடு சிறப்பு ரயில் ( வண்டி எண் - 02649 ).

சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் ( வண்டி எண் - 06101 )

நாகர்கோயில் சிறப்பு ரயில் ( வண்டி எண் - 06063 )

உட்பட 25 சிறப்பு ரயில்கள் நாளை முதல் ஜூலை 1ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve