என்னற்ற உயிர் தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15- அன்று அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு செய்தாலும் கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறப்புகளை கண்டு கொள்ளாமல் உரிய பாராமரிப்பின்றி விட்டு விடுவது இந்தியாவின் சுதந்திரத்தையும்,
சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிகளையும் அவமதிப்பு செய்து வருகிறோமோ என்ற மன வேதனை கொள்ள வேண்டிவுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் திருப்பராய்துறை கிராம ஊராட்சியில் ராம வாத்தலை வாய்க்கால் கரையில் (முக்கொம்பு அருகே). இந்திய சுதந்திர தின 25- ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக நினைவு கல் இரண்டு
நடப்பட்டுள்ளது. ஒன்று நினைவு கல்லாகவும். மற்றொன்று இந்தியாவின் அரசியல் அமைப்பு முகப்புரையும் பொறிக்ப்பட்டுள்ளது. இதன் பின் புறத்தில் . அந்தநல்லூர் ஒன்றியத்தில் தங்களை அர்பணித்து கொண்ட வி.ராமசாமி ஆசாரி,அய்யாசாமி, பொன்னுச்சாமி,|அலமேலு மங்கை. ,எட்டரை அண்ணாவி,அப்பாவு
உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு.கல் தூண்கள். உரிய பராமரிப்பு இல்லாமல். குப்பை மேட் டில் இருந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொண்டு வரும் ஆகஸ்ட் 15,க்குள் நாட்டின் சுதந்திரத்தையும்,சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும்
வகையிலும் இந்த நினைவு கல்வெட்டுகளை புதுப்பித்து பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்து சிறப்பிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே சரவணன் அவர்களிடம் அயிலை சிவசூரியன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
25 ஆம் ஆண்டு சுதந்திர தின பொன்விழா நினைவு தூண்கள் குப்பை மேட்டில்- புதுப்பிக்க கோரிக்கை

Comments