வாடகை நிலுவை - திருச்சியில் 27 கடைகளை பூட்டி சீல்

வாடகை நிலுவை - திருச்சியில் 27 கடைகளை பூட்டி சீல்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள், பழைய நகராட்சி அலுவலக பழைய கடைகள், பழைய நகராட்சி அலுவலக புதிய கடைகள் மற்றும் சுவாமிநாதன் தினசரி மார்கெட்டில் கடைகள் உள்ளன. இங்கு மாத வாடகைக்கு கடை வைத்துள்ளவர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு பலமுறை வாடகை நிலுவை தொகையினை செலுத்த கோரி கேட்பு அறிவிப்புகள், நேரில் மற்றும் தொலைபேசி மூலமும் ஒலி பெருக்கி வாயிலாகவும் பல முறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிலர் கடை வாடகையினை செலுத்தாமல் அதிக நிலுவை வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.

ரூ.55 லட்சம் பாக்கி இருந்தையடுத்து ஆணையாளர் போ.வி.சுரேந்திரஷா, உத்தரவின் படி வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன்படி, வருவாய் ஆய்வாளர்கள் கலைபிரியன், பாண்டித்துரை, நகரமைப்பு ஆய்வாளர், சந்திரா, இருக்கை எழுத்தர் ஜெயக்குமார்,, வருவாய் உதவியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர், வாடகை நிலுவைத்தொகை வைத்திருந்த 27 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

இது பற்றி நகராட்சி ஆணையாளர் போ.வி. சுரேந்திரஷா கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகையினை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அவர்கள் மீது சட்டபூர்வ மேல்நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision