மத்திய மண்டலத்தில் 28 போலி மருத்துவர்கள் கைது
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் நேரடி மேற்பார்வையில் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறையினர், மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த (01.04.2023) முதல் நடத்திய அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 28 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். (புதுக்கோட்டை-4, பெரம்பலூர்-3, அரியலூர்-4, தஞ்சாவூர்-5, திருவாரூர்-10, நாகப்பட்டிணம்-3) அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து பொது மக்களின் நன்மையை கருதி மேலும் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படும் என்றும், பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள்
கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn