இராப்பத்து இரண்டாம்நாள் - வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து, சௌரிக் கொண்டையுடன் நம்பெருமாள்

இராப்பத்து இரண்டாம்நாள் - வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து, சௌரிக் கொண்டையுடன் நம்பெருமாள்

திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து திருவாய்மொழித் திருநாள் இரண்டாம் திருநாள் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. திருவாய்மொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து நீண்ட சௌரிக் கொண்டை சாற்றி: அதில் கலிங்கத்துராய், சந்திர - சூர்ய வில்லை; சிகப்பு கல் நெற்றி சரம்; கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம்;

திரு மார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; இரு புறமும் புஜ கீர்த்தி அதன் கீழ் மகரி, வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள், தங்க பூண் பவழ மாலை ; காசு மாலை; மரகத பச்சை கிளி ஹாரம் அணிந்து; பின்புறம் - சௌரியில் கோடாலி முடிச்சு போட்டு - அதில் வைர ரங்கூன் அடிக்கை சாற்றி; பங்குனி உத்திர பதக்கம் அணிந்து;

இரு திருக்கைகளிலும் - வெள்ளை கல் அரசிலை பதக்கம் சாற்றி; இடுப்பில் கல் இழைத்த ஒட்டியாணம் சாற்றி ; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision