திருச்சி பால் பண்ணை ரவுண்டானா, அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய 2வது கேத்லாப் (Cath Lab) மற்றும் புதிய கிரிட்டிக்கல் கேர் யூனிட்டையும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு எளிதாக வருவதற்காக புதிய பேருந்து நிறுத்தமும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்

நிகழ்ச்சியில் மூத்த இதய நிபுணர்கள் டாக்டர் காதர் ஷாகிப் அஸ்ரப், டாக்டர் ஷாம் சுந்தர், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் விஜய் சேகர், டாக்டர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 3வது மண்டல தலைவர் திரு.மு. மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த புதிய மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சையை மேலும் எளிதாக வழங்க உதவும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும்

பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு எளிதாக வருவதற்காக புதிய பேருந்து நிறுத்தம் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் அசோசியேட் துணை தலைவர் திரு. ஜெயராமன் முன்னிலை வகித்தார். மேலும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments