தமிழக அரசால் திருச்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

தமிழக அரசால் திருச்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் 3 வாகனங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் 3 வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

Advertisement

108 ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்ததாவது… "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் 31 இடங்களில் 108 இலவச அவரச ஊர்தி மூலம் மருத்துவ சேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகள் கொண்ட வாகனமும், 2 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு வாகனங்களும், திருச்சி மற்றும் மணப்பாறை மருத்துவமனையில் செயல்படுகின்றன. மற்றவை வாகனங்கள் அடிப்படை வசதிகள் கொண்ட இலவச அவரச ஊர்தி சேவையாகும்.

தமிழக அரசால் நமது மாவட்டத்தில் காட்டுப்புத்தூர், துவாக்குடி,இலால்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு,108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 3 வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான வென்டிலேட்டர்,
டிஃபிலேட்டர், சிரஞ்பம்பு,
இன்ஃபியூசன்பம்பு ஆகிய அனைத்தும் வசதிகளும் கொண்ட வாகனமும்,2 அடிப்படை வசதிகள் கொண்ட வாகனமும் வழங்கப்பட்டுள்ளது." என்று அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அக்சையா பேகம், இணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர் எஸ்.லெட்சுமி, அரசு மருத்துவமனை மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன், ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன், அமராவதி தலைவர் ஏர்போர்ட் விஜி, நகர் கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாதன், வெக்காளியம்மன் கோவில் தலைவர் வி.அருள் ஜோதி, மாவட்ட அரங்காவலர் குழு நியமன உறுப்பினர் மலைக்கோட்டை ஐய்யப்பன், கோ-அபிஷேகபுரம் முன்னாள் கோட்டத்தலைவர் ஆர். ஞாணசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.