காப்புக்காட்டில் மரம் வெட்டிய 2 பேர் மற்றும் ஆம்பர்கிரிஸ் (திமிங்கிலத்தின் வாந்தி) வைத்திருந்த ஒருவர் என 3 பேர் கைது
திருச்சி வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காப்பு காட்டில் மரங்கள் வெட்டப்பட்டது அறியப்பட்டு மாவட்ட வன அலுவலர் கிருத்திகா மற்றும் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் மணப்பாறை வனச்சரக அலுவலரின் தலைமையிலான குழு பொய்கை மலை பாதுகாப்பு காட்டில் புரசு மரம் மரங்களை 2 நபர்கள் வெட்டிக் கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில்.. புத்தாநத்தம் கிராமம் வடக்கு இடையபட்டியை சேர்ந்த முனியப்பன் (28), குமாரவாடி கிராமம் சேசலூரை சேர்ந்த முருகேசன் (45) ஆகிய இருவரையும் கைது செய்து, வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது இருவரும் சுமார் 2 வருடங்களாக வனத்துறைக்கு சொந்தமான செம்மலை, காடபிச்சாம்பட்டி மலை, மருங்காபுரி மலை ஆகிய மலைப் பகுதிகளில் இவ்வகை மரத்தினை வெட்டி விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த மரத்தில் மண்வெட்டி, கோடாரி, வேர் வெட்டி போன்றவற்றிற்கு கைப்பிடி செய்ய பயன்படுகிறது. மேலும் முனியப்பனை விசாரணை செய்ததில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (திமிங்கலத்தில் வாந்தி) எனும் வன உயிரின பொருளை குமாரவாடி கிராமம் சேசலூரை சேர்ந்த தேக்கமலை என்பவரிடம் விற்றதாக கூறினார். இதன் அடிப்படையில் தேக்கமலை என்பவரின் வீட்டை சோதனை செய்ததில் அங்கு ஆம்பர் கிரீஸ் மற்றும் சில வன உயிரின மற்றும் வனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision