அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம்
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி, கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்னாம் ரோந்து செய்தும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான
நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

நடப்பாண்டில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 233 குற்றவாளிகளிடமிருந்து, ரூ.22 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களும், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை
செய்த 772 குற்றவாளிகளிடமிருந்து ரூ. 22 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களும் பறிமுதல் செய்தும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 203 குற்றவாளிகள் கைது செய்யப்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனை
செய்பவரை தடுக்கும் பொருட்டு ரோந்து செய்தபோது 09.11-21-ஆம் தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெம்ஸ்டவுன் பொது கழிப்பிடம் அருகில் குணா என்கிற குணசேகரன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில வாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் நிலையம் கொண்டு வந்து மேற்படி எதிரி மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 09.11.21-ஆம் தேதி
சங்கிலியாண்டாபுரம் இராமமூர்த்தி நகர் வாட்டர் டேங்க் அருகில் இளையராஜா என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா
விற்பனை செய்தவர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தும், 10.11.21 ஆம் தேதி சங்கிலியாண்டாபுரம் கோவில் அருகில் ஏழுமலை (25) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்
மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தும், எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் மேற்படி எதிரி குணா @ குணசேகரன், மீது திருச்சி மாநகரில் 16 கள்ள லாட்டரி சீட்டு வழக்குகள் உள்பட 41 வழக்குகளும், எதிரி இளையராஜா மீது 14 கள்ள லாட்டரி சீட்டு வழக்குகள் உள்பட 31 வழக்குகளும், ஏழுமலை மீது கள்ள லாட்டரி சீட்டு வழக்குகள் உள்பட 18 வழக்குகளும் நிலுவையில் உள்ளது என தெரியவந்தது.

எனவே, மேற்படி குனர் என்கிற குனசேகரன், இளையராஜா, மற்றும் ஏழுமலை, ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பாலக்கரை
காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குணா @ குணசேகான், ஏழுமலை, மற்றும் இளையராஜா, ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn