தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களின் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டம் முழுவதுமே இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் முசிறி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் எம்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபுரம் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் செல்வராஜ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பசு மாடுகளை கட்டி வைத்துள்ளார்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மூன்று பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இத்தகவலறிந்த முசிறி வருவாய்த் துறையினர், போலீஸார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுனர். மேலும் முசிறி நகரப் பகுதியில் மின் மாற்றிகள் மற்றும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments