பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகளை எடுத்து வந்த இரண்டு ஈச்சர் உட்பட 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகளை எடுத்து வந்த இரண்டு ஈச்சர் உட்பட 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வந்து திருச்சி பகுதியில் கடை அமைத்து சில்லரை விற்பனை செய்வதற்காக பெரிய அளவில் பட்டாசுகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து அதனை சரக்கு வாகனங்களில் அரசின் உரிய அனுமதி பெற்று ஏற்றி வருவது வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் தீபாவளி பண்டிகை வர இருப்பதை முன்னிட்டு சிவகாசியில் இருந்து அரசின் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசுகளை ஏற்றி வந்த இரண்டு ஈச்சர் மற்றும் ஒரு டாட்டா ஏசி வாகனதங்களை மணிகண்டம் அருகே உள்ள அலந்தூர் பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக ரோந்து சென்ற மணிகண்டம் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் மூன்று வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் அரசின் உரிய அனுமதி பெறவில்லை என்பதும், எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு பொருட்களை எந்தவித பாதுகாப்பு இல்லாமல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் திருச்சி இனாமத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாண்டியன் (27), மதுரை உசிலம்பட்டி உத்தம நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கணேசன் (33), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா (39) என்பது தெரியவந்தது அவர்கள் மூன்று பேரையும் கைது செய்ததோடு மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த வாகனங்களில் இருந்த ரூபாய் 16.40 லட்சம் மதிப்பில் இருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision