திருச்சி பாலக்கரை அடுத்த பிள்ளை மாநகர் எடத்தெருவை சேர்ந்த சாமிதுரை – மஞ்சுளா தம்பதியினர் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர்.
Advertisement
இன்று மாலை நான்கு மணி அளவில் வீட்டில் பானிபூரி செய்துகொண்டிருக்கும்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீ பற்றிக் கொள்ள அருகே இருந்த இரு வீடுகளும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து
தகவல் அறிந்து அங்கு வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் தீயை உடனடியாக அணைத்தனர்.
ஆயினும் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.
தீ விபத்து குறித்து காந்தி சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Comments