திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சத்திரப்பட்டி சேர்ந்த ஒப்பாயி, அவருடைய மகன் ராமமூர்த்தி, ராமமூர்த்தியின் மகன் குணசேகரன் ஆகியோர் இன்று கீழக்காடு பகுதியில் உள்ள அவர்களுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மின்கம்பம் அறுந்து விழுந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
Comments