உண்டியலில் கை வைத்த 3 பேர் கைது

உண்டியலில் கை வைத்த 3 பேர் கைது

திருச்சி கருமண்டபம் பால்பண்ணை பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெருவை சேர்ந்த சேகர் மகன் வினோத் (19), பிராட்டியூர் ஏஓ காலனியைச் சேர்ந்த காமராஜ் மகன் சிபிராஜ் (20), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது.

இதனையடுத்து இந்த மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2000பணமும், ஒரு இருசக்கர வாகத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வினோத், சிபிராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வினோத், சிபிராஜ் திருச்சி மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளது இந்த பெரிய மிளகுபாறை பகுதி. இப்பகுதியில் உள்ள வாலிபர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவு கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

இதனால் இவர்கள் அதிக அளவு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெரிய மிளகு பாறை பகுதியில் நான்கு முறை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது மட்டுமின்றி பிற பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பெரிய மிளகு பாறை பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு வருகை தருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision