திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சீகம்பட்டி கரட்டில் அருகே சீட்டுக்கட்டு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் ரூபன்ராஜ் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று பார்த்தபோது,
அங்கு ந.சீகம்பட்டி சண்முகம் மகன் சிலம்பரசன்(36), திண்டுக்கல் மாவட்டம் எஸ்.புதுப்பட்டி சின்னத்துரை மகன் மனோகரன்(40), ஆறுமுகம் மகன் சுரேஷ்(35) ஆகியோர் சீட்டுக்கட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கையும் களவுமாக பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, கைப்பேசி மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments