மது அருந்த கூடாது என எச்சரித்தவரை மண்டை உடைத்த 3 வாலிபர்கள்

மது அருந்த கூடாது என எச்சரித்தவரை மண்டை உடைத்த 3 வாலிபர்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடகரையில் யாத்ரி நிவாஸ் எதிர்புறம் பகுதியில் 3 வாலிபர்கள் மதுபானம் அருந்தி உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர் வடமலை (45) மது அருந்த கூடாது என எச்சரித்துள்ளார். அப்போது  3 வாலிபர்கள் வடமலையை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu