குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அசிங்கம் செய்த 3 இளைஞர்கள் - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அசிங்கம் செய்த 3 இளைஞர்கள் - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி சேர்ந்த கவுண்டம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தொட்டி அமைத்துள்ளனர் .

இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் மது போதையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேலே ஏறி குளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை சத்தமிடவும் இறங்கி சென்றுள்ளனர்.

எனவே மது போதையில் ஏறிய இளைஞர்கள் குளித்தனாரா அல்லது புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவம் போல் ஏதாவது நடந்துள்ளதா என்ற அச்சத்தோடு இருந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பைஞ்சீலி மண்ணச்சநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மணச்சநல்லூர் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது மது போதையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் குளித்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடிநீரை முழுவதும் அப்புறப்படுத்திவிட்டு நீர் தேக்க தொட்டி முழுவதனையும் தூய்மைப்படுத்தி அதன்பிறகு குடிநீர் விட வேண்டும் என வலியுறுத்தினர் .

இதனை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision