பூட்டிருந்த மதுக்கடையில் தீ விபத்து 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாயின
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று மட்டும் நாளை அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் நேற்றே அதிகளவு மது வாங்கி சென்றுள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி அண்ணாமலை நகரில் பூட்டிக்கிடந்த அரசு மதுபானக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த வளாக கட்டிடத்தில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்தலசுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. இரண்டு நாட்கள் மதுகடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதுக்கான காரணம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட மதுகடைக்கு அருகில் நகைக்கடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF