Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரில் அடர்வன காடு உருவாக்க 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு 
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்காவில் 17632 சதுரஅடி பரப்பளவில் மியாவாக்கி அடர்வனக்காடு உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று (07.05.2022) தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்கா மற்றும் வின்ஸ் அன்பு அவென்யூ பூங்கா, கணபதி நகர் பூங்கா, சுப்பிரமணிய நகர் பூங்கா, பாத்திமா நகர் அம்மன்நகர் பூங்கா, மற்றொரு கணபதி நகர் பூங்கா, நட்சத்திர நகர் பேஸ்2 பூங்கா ஆகிய 7 இடங்களில்

1 இலட்சத்து 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அடர்வனம் உருவாக்கும் பணி 
மேற்கொள்ளப்படுகிறது. இந்த அடர்வனத்தில், புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, நீர்மருது, பாதாம், இச்சி உள்ளிட்ட 24 வகை 3000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *