உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளில், உலகஅமைதிக்காக திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில், 75 திருக்குறளை மெல்லிசை வடிவில் பாடி உலகசாதனை நிகழ்த்தினார்கள்.
அறத்துப்பாலில் உள்ள கடவுள் வாழ்த்து, அன்புடைமை, இனியவை கூறல், ஈகை, வாய்மை, மெய்யுணர்தல், அவா அறுத்தல், துறவு ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள 75 குறட்பாக்களை இசைத்துறை தலைவர் முனைவர்.லலிதாம்பாள் இசையமைத்துபாட, பேராசிரிய பெருமக்கள், மற்றும் மாணவியர்கள் என 3200 பேர் ஒன்றாகஇணைந்து, ஒரே ராகத்துடன்பாடி, உலக அமைதிகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
உலக சாதனை புத்தக நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட
இந்த உலக சாதனை நிகழ்வானது விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதுடன், சாதனை அங்கீகார சான்றிதழையும் கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கி பாராட்டினார்கள்.
வழக்கமாக, பள்ளிகளில் திருக்குறள் மனப்பாடம் செய்து எழுதவும், ஒப்புவிக்கவும் மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது திருக்குறள் இசை வடிவில் கல்லூரி மாணவிகளால் அரங்கேற்றப்பட்ட நிலையில் இது போன்ற இசை வடிவிலான திருக்குறள் மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் அதே நேரம் வரும் காலத்தில் திருக்குறளில் 1330 குறள்களையும் இசையமைத்து பாட உள்ளதாகவும் தெரிவித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments