செய்தி செயலி என ஆசை வார்த்தை கூறி 350 கோடி ரூபாய் மோசடி - நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

செய்தி செயலி என ஆசை வார்த்தை கூறி 350 கோடி ரூபாய் மோசடி - நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

செய்தி செயலி எனக்கூறி 350 கோடி ரூபாய் வரை மக்களின் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.

ஏசிடி என்ற செயலி மூலம் 300 ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி செயலியில் பதிவு செய்து கொண்டு தினமும் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகளை பார்த்தவுடன் Done என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் செலுத்தியுள்ள முதலீட்டிற்கு ஏற்றவாறு பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு ஏறிவிடும் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை இத்திட்டத்தில் இணைத்துள்ளனர்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

இத்திட்டத்தில் மக்கள் தங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் என பணம் கிடைக்கும் எனக் கூறி அதிகமான பேரை சேர்த்துள்ளனர். ஆரம்பத்தில் பணம் வந்துள்ளது. கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் இச்செயலி செயல்படாமல் போனது.இது குறித்து மக்கள் இந்நிறுவனத்தில் புகார் கொடுத்தும் எந்தவொரு பதில் கொடுக்கவில்லை.

Advertisement

350 கோடி ரூபாய் தமிழக மக்களின் பணத்தை ஏமாற்றிய, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏடிசி(APEX DIGITAL CHANNEL) நிறுவனத்தை கண்டித்தும், நிறுவனர் சுரேஷ் பாண்டியாவையும், மோசடிக்கு காரணமாக இருந்த நாகர்கோவிலை சேர்ந்த முகமது ரபிக் மற்றும் திருவண்ணாமலை ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், மக்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தர கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.