இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழுமத்தில் 376 காலிப்பணியிடங்கள்!!

இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழுமத்தில் 376 காலிப்பணியிடங்கள்!!

5 வகையான பிரிவுகளில் மொத்தம் 367 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதில் குறிப்பாக "வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டில்" (Air Traffic Control) 263 காலியிடங்கள் உள்ளது. பைலட் பணியை விட முக்கியத்துவம் வாய்ந்த ATC பணிக்கு தமிழர்கள் அதிகமாக விண்ணப்பிக்காததே பெருங்குறையாகும். பலருக்கு இவ்வகை வேலைவாய்ப்பு பற்றியோ, இதற்கு விண்ணப்பிப்பது பற்றியோ தெரியவில்லை. ஆகவே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழில் ஒரு சிறிய தொகுப்பாக நாம் வெளியிடுகிறோம். 

Advertisement

1. மேலாளர் (தீயணைப்புத்துறை)

காலியிடங்கள் - 11

கல்வித்தகுதி.

A) B.E அல்லது B.Tech தீயணைப்பு பொறியியல் Fire Engg.

B) மெக்கானிக்கல் இஞ்சினியரிங்

C) ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்

இதற்கான முன்அனுபவம்.

குறைந்தது 5 வருடம்

2. மேலாளர் (டெக்னிகல்)

காலியிடங்கள் - 2 

கல்வித்தகுதி

A) மெக்கானிக்கல் இஞ்சினியரிங்

B) ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்

இதற்கான முன் அனுபவம்.

5 வருட எக்ஸிக்யூடிவ் கேடர் (அரசுப்பணியில்)

3. ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் (வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு)

காலியிடங்கள் - 264

கல்வித்தகுதி

A) பூர்த்தி செய்த மூன்றுவருட இளநிலை அறிவியல், இயற்பியல் B.Sc. Physics

B) பூர்த்தி செய்த மூன்றுவருட இளநிலை அறிவியல், கணக்கு B.Sc. Mathmatics

C) நான்கு வருட பொறியியல் (Any Eng. Degree) ஆனால் கணக்கு மற்றும் இயற்பியல் அதில் ஒரு பாடங்களாக இருத்தல் வேண்டும்.

Advertisement

இதற்கான முன்அனுபவம்.

முன் அனுபவம் தேவையில்லை. புதிதாக பட்ட பொறியியல் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் (ஏர்போர்ட் ஆபரேசன்ஸ்)

காலியிடங்கள் - 83

இதற்கான கல்வித்தகுதி.

A) இளம்அறிவியல் (Science) பட்டப்படிப்பு முடித்து அதற்குப்பின்னர் MBA முடித்திருக்கவேண்டும்.

B) நான்கு வருட பொறியியல் (Any Eng. Degree) ஆனால் கணக்கு மற்றும் இயற்பியல் அதில் ஒரு பாடங்களாக இருத்தல் வேண்டும்.

இதற்கான முன்அனுபவம்.

தேவையில்லை.

5. ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் டெக்னிகல்.

காலியிடங்கள் - 8

கல்வித்தகுதி

A) மெக்கானிக்கல் இஞ்சினியரிங்

B) ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்

முன்அனுபவம்

தேவையில்லை.

ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் (வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு)

காலியிடங்கள் - 264.

ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் (ஏர்போர்ட் ஆபரேசன்ஸ்)

காலியிடங்கள் - 83.

ஜுனியர் எக்ஸிக்யூட்டிவ் டெக்னிகல்.

காலியிடங்கள் - 8

குறிப்பாக இந்த மூன்று வகை இனங்களையும் சேர்த்து மொத்தம் 355 காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்அனுபவம் தேவையில்லை. அனைத்து பி.இ. பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பி.இ. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பி.எஸ்ஸி-பிஸிக்ஸ் மற்றும் பி.எஸ்ஸி-மேத்மெடிக்ஸ் படித்த அனைவருக்கும் இது ஒரு அற்புதமான வாய்ப்பு ஆகும். பயண்படுத்திக்கொள்வது நமது இளைஞர் இளைஞிகள் கையில் உள்ளது. நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்தே இல்லை. இதனால்தான் நமது தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் வட இந்தியர்கள் வேலையில் அமர்த்தப்படுகின்றனர். நமது தமிழ்நாட்டு இளைஞர்களின் கவனக்குறைவே இங்கெல்லாம் பிற மாநிலத்தவர்கள் பெரிய பதவிகளில் குறிப்பாக நம்மை ஆதிக்கம் செலுத்தும் பதவிகளில் கோலோச்சுகின்றனர். இந்த சூழலை மாற்ற முதலில் நாம் நமது படித்த இளைஞர்களை வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கப்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் என மூன்று இண்டர்நேசனல் கேட்டகரி விமானநிலையங்களும், சுங்கத்துறை - கஸ்டம்ஸ் கேட்டகரியில் மதுரை விமானநிலையமும், டொமஸ்டிக் கேட்டகரியில் தூத்துக்குடி, சேலம் விமானநிலையங்களும், வேலூர் அப்துல்லாபுரம், நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, உச்சிப்புளி ஆகிய இடங்களில் போக்குவரத்து இல்லாத விமானநிலையங்களும் உள்ளன. ஒசூர் பெலகொண்டனபள்ளியில் தனியார் விமானநிலையமும் உள்ளது. இவ்வளவு அதிகமான விமானநிலையங்கள் இந்தியஅளவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை. நாம்தான் இந்த விமானநிலையங்கள், அதன் பணிகளின் முக்கியத்துவத்தை அறியாமல் விண்ணப்பிப்பது இல்லை. இந்த நிலையை மாற்ற அதிகமாக நமது படித்த இளைஞர்கள் முன்வரவேண்டும்.

மேலுள்ள வேலை வாய்ப்புகள் மட்டுமன்றி அனைத்து வகை "இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்தின்" வேலைவாய்ப்பு விபரங்களை அறிந்துக்கொள்ள கீழுள்ள இணைப்பை அணுகவும்.

https://www.aai.aero/en/careers/recruitment

அதேபோல் இதில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சான்றிதழ் பதிவேற்றம், விண்ணப்பக்கட்டண பரிமாற்றங்கள் அனைத்தும் செய்யப்படவேண்டும்.

கவனிக்க விண்ணப்பிக்க இறுதி நாள் 14/01/2021. பி.இ. முடித்த இளைஞர்கள் இவ்வாய்ப்பை தவறவிட வேண்டாம்.

மேலும் இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்தின் வேலை வாய்ப்பு செய்திகள் இந்த இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a