திருச்சியிலிருந்து ஒடிசாவை சேர்ந்த 379 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு!

திருச்சியிலிருந்து ஒடிசாவை சேர்ந்த 379 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பணி புரிந்து வந்த 379 ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அனுப்பி வைத்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என ஆணையிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருச்சி, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் தங்கி பணி புரிந்த மொத்தம் 379 தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சமூக இடைவெளி கடைபிடித்து மத்திய உணவு வழங்கி சிறப்பு ரயிலில் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று அனுப்பி வைத்தார்