திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்கவும், காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும், அரசால் தடை செய்யப்பட்ட
வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்படி கடந்த 01.11.21-ந் தேதி முதல் திருச்சி மாநகர காவல்
எல்லைக்குட்பட்ட உறையூர் காவல்நிலையத்தில் 6 வழக்கில் 7 எதிரிகளையும், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல்நிலையங்களில் தலா 4 வழக்கில் 10
எதிரிகளையும், காந்திமார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர் ஆகிய
காவல்நிலையங்களில் தலா 3 வழக்கில் 16 எதிரிகளையும், கண்டோன்மெண்ட்
மற்றும் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையங்களில் தலா 2 வழக்குகளில் 4 எதிரிகளையும், அரியமங்கலம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கில் 1 எதிரி என மொத்தம் 28 வழக்குகளில் 38 எதிரிகள் 20 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி எதிரிகளிடமிருந்து பணம், கள்ள லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 7 செல்போன், மூன்று இருசக்கர வாகனம், ஒரு மூன்று வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments