இராப்பத்து 3ஆம் நாள் - மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து, கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் இராப் பத்து 3ஆம் நாள் திருவாய்மொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் நிற வஸ்திரம் (பீதாம்பரம் )அணிந்து, கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி: அதில் நெற்றி சுட்டி பூ ; முத்து தொங்கல் அசைய; மகர கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம் ; கோலக்கிளி தாங்கி; காசு மாலையை திருமார்பு வரை மட்டுமே சாற்றி -
சிகப்பு கல் தொங்கல் பதக்கம் நடுவிலும், இரு பக்கமும் வெள்ளைக் கல் அரசிலை பதக்கம் சாற்றி; கல் இழைத்த ஒட்டியாணம், மகரி , அடுக்கு பதக்கங்கள்; தங்க பூண் பவழ மாலை , 2 வட முத்து சரம் அணிந்து; பின்புறம் - காசு மாலை, பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி , தாயத்து சரங்கள் அணிந்து தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision