செம்பட்டு ஜன 4 திருச்சி விமான நிலையத்தில் தற்போது அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து விமானத்தில் பயணம் செய்வதற்கு வருபவர்களும் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து விமானத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிக அளவில் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது வாடிக்கை.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் 10 நிமிடங்களுக்கு எந்த வித கட்டணங்களும் வசூலிக்கப்படாமல் பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 10 நிமிடத்திற்குள் பயணிகளை அழைத்துக் கொண்டு வெளியேறும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுங்க கட்டண வசூல் மையத்தில் வாகனம் வரும்பொழுது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது இதனால் அவர்கள் கொடுத்துள்ள 10 நிமிடத்தை கடந்து நேரமாகிவிடும் காரணத்தினால் சுங்க கட்டணம் கண்டிப்பாக செலுத்தும் நிலை ஏற்படுகிறது இதனால் வாகன ஓட்டுநர்களுக்கும், சுங்க கட்டண வசூல் மையத்தில் பணிபுரிபவர்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
மேலும் அந்தப் பகுதியில் மூன்று கட்டணம் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டும் இரண்டு மட்டுமே செயல் புரியும் நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
மூன்று கட்டண வசூல் மையங்களையும் செயல்படும் நிலை ஏற்படுத்தினால் பத்து நிமிடங்களில் வெளியேறும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லாமல் வெளியேறும் நிலை ஏற்படும். இதனை தவிர்க்கும் நிலையில் சுங்க கட்டண வசூல் மைய ஒப்பந்ததாரர் இரண்டு கட்டண வசூல் மையங்களை மட்டும் செயல்படுத்துவதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு கட்டாய வசூல் தொகை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
இதனால் சுமார் 700 மீட்டர் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது இதனால் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடம் வரை வரிசையில் காத்திருப்பதால் அவர்கள் கொடுத்த இலவச 10 நிமிடம் பயனற்ற நிலை ஏற்படுகிறது இதனால் கட்டண வசூல் மையங்களில் கண்டிப்பாக வசூல் தொகை வசூலித்த பிறகு வாகனங்கள் வெளியேறும் நிலை ஏற்படுகிறது இதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பயணிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுத்து வாகனங்கள் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments