4 வாக்கு எண்ணிக்கை மையங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு

4 வாக்கு எண்ணிக்கை மையங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியிலும்,

ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், 

மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், 

முசிரி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூரில் இமயம் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr