திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு .

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு .

முசிரியில் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு  தேர்தல் பரப்புரை ஈடுபட்டார். அதன்பிறகு அவர் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முசிரி வேட்பாளர் தியாகராஜன் உடன்  பேசிக்கொண்டிருக்கும் போது கட்சி நிர்வாகிகள் சில கருத்துகளை கூறினார்கள்.

அப்பொழுது நேரு ஆபாசமாக கட்சி நிர்வாகிகளை பார்த்து பேசினார். மேலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை மிரட்டல் விடுத்து பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகியது.ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான உரையாடல் அதில் இருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அதற்கான ஆதாரங்களை காவல் அதிகாரியிடம் கொடுத்து புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது .ஆபாச வார்த்தைகளை பேசியதும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட  5 பிரிவுகளில் கே.என்.நேரு மீது  முசிரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரும் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு மீது பதியப்பட்டுள்ள வழக்கின் சட்டபிரிவுகள்  1. 294b, 2.161e, 3.171e,h, 4.506 (I), 5.67 IT Act. 1.பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல், 2.தேர்தல் நேரத்தில் பரிசுப் பொருள் வழங்க தூண்டுதல், 3.தேர்தலுக்கு பணம் கொடுக்க தூண்டுதல், 4.கொலை வெறியாக தாக்குவதாக கூறுதல், 5.தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81