திருச்சி திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கல்லணை சாலையில் வந்த பிரபல உணவு பொருள் டெலிவரி செய்யும் (சுமாட்டோர நிறுவன இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்த பொழுது அதில்13 பண்டல்கள் 207 பாக்கெட் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் எடை 4.14 கிலோகிராம் இதன் மதிப்பு ரூ8000 இருக்கும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவனைப் பிடித்து விசாரித்த போது குளித்தலை சீக்கம்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பது தெரியவந்தது.அவனை கைது செய்துதிருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments