திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (70). கூலி தொழிலாளியான இவர் உறவினர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அரிவாளுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரன் வீட்டு அருகே நின்று தகராறு செய்துள்ளனர். இதை ராமச்சந்திரன் தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற ராமச்சந்திரன் மகள் விஜயலட்சுமி, ராஜேந்திரன், நடராஜன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைத்தொடர்ந்து 10 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் காவல் ஆய்வாளர் ரகுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு மண்ணச்சநல்லூர் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
 இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. யுவராஜ் என்ற இளைஞர் கண்ணன் என்பவரின் மனைவி சந்தியாவிடம் அவரது செல்போன் என்னை யுவராஜ் கேட்டதாகவும், ஆத்திரமடைந்த கண்ணன் அவரது உறவினர்கள் யுவராஜ் வீட்டிற்கு சென்று யுவராஜ் உறவினர்கள் ராமச்சந்திரன், நடராஜன், ராஜேந்திரன், விஜயலட்சுமி, ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

 31 Oct, 2025
31 Oct, 2025                           134
134                           
 
 13 February, 2024
 13 February, 2024

Comments