திருச்சி மாநகரத்தில் ஒரு வாரத்தில் மட்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 36 வழக்குகள் பதிவு செய்து, வழக்கின் எதிரிகளான 40 நபர்களை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மொத்தம் 610 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
செய்தும்,
குட்கா பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய ஒரு மூன்று
சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments