திருச்சிராப்பள்ளி முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அங்காளம்மன் மளிகை மற்றும் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள SM டிரேடர்ஸ் என்ற இரண்டு கடைகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததினால்,
மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், ஸ்டாலின்பிரபு, பாண்டி, வடிவேல், ஜஸ்டின் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் ஆய்வின்போது அவரது கடை மற்றும் குடோனில் சுமார் 43 கிலோ புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அந்த இரண்டு கடைகள் மற்றும் குடோன் சீல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஜீயபுரம் காவல் நிலையத்தில் இரண்டு கடை உரிமையாளர்களும் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்… திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் : 9444042322







Comments