அமைச்சருக்கு அதிர்ச்சி அதிகாரிகள் அமைச்சர்கள் யாரும் ஆய்வுகூட்டத்தில் ஆஜராகாததால் 45 நிமிடம் காத்திருப்பு

அமைச்சருக்கு அதிர்ச்சி அதிகாரிகள் அமைச்சர்கள் யாரும் ஆய்வுகூட்டத்தில் ஆஜராகாததால் 45 நிமிடம் காத்திருப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் இன்று காலை 9 மணிக்கு நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.குறித்த நேரத்திற்கு வரும் அமைச்சர் நேரு காலை 9 மணிக்கு வந்து விட்டார்.வெளியில் கண்காட்சி காண ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆய்வு கூட்டம் நடைபெறும் உள்ளே முக்கிய அதிகாரிகள் அமைச்சர்கள் யாரும் வரவில்லை 45 நிமிடம் காத்திருந்த அமைச்சர் நேரு மேடையில் ஏறி அமர்ந்த பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் வர துவங்கினர். அதன் பிறகு அதிகாரிகள் உள்ளிட்டோ ஆய்வு கூட்டு அரங்கிற்கு உள்ளே நுழைந்தனர்.

முக்கியமாக பிற்படுத்தப்பட்டடோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அமைச்சர் நேரு பேசி முடித்தவுடன் தாமதமாக ஆய்வு கூட்டத்திற்கு வந்தார்.

மேலும் இக்கூட்டம் துறை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேயர் மற்றும் நகராட்சி துறை அலுவலர்கள் பங்கேற்க கூடியது. இதில் அரசியல்வாதிகள் மாவட்ட செயலாளர்களும் உள்ளே அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கப்பட்ட இருக்கையில் மாவட்ட செயலாளர்கள் கட்சி பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான இருக்கையில் அமைச்சர்,எம்.பி உள்ளிட்டடோருடன் வந்ந ஆதரவாளர்கள் அமர்ந்திருந்தனர்.

அதிகாரிகள் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. மேலும் கட்சிக்காரர்கள் ஏராளமானோர் உள்ளே ஆய்வுக்கூட்டத்தில் கடைசி வரிசையில் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision