விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 47 பேர் மீது வழக்கு

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 47 பேர் மீது வழக்கு

காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி தீபாவளி (04.11.2021) அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் சில ரக வெடிகளை வெடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தீபாவளியன்று அரசின் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு வரை பட்டாசு வெடித்ததாக திருச்சி மாநகரில் 25 பேர் மீதும், திருச்சி புறநகரில் 22 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாநகரில் தீபாவளி அன்று இரவு தொடர்ச்சியாக ஆங்காங்கே கூடி நின்று பொதுமக்கள் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை வெடி வெடித்ததன் காரணமாக மாநகரின் பல்வேறு சாலைகளில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision